ஒரு சாதாரண சளி தொந்தரவால் தும்மல், மூக்கு ஒழுகுதல், தலை பாரமாக இருப்பது போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம்; மக்கள் இதனை வெறும் ‘சாதாரண சளி’ என்று கூறிவிடுவார்கள். ஆனால், இந்த சாதாரண சளி ஏற்பட்டால், அதனால் ஒருவர் அடையும் மோசமான தொந்தரவுகள் அவர் மட்டுமே அறிய முடியும் ! சளிப்பிரச்சனை ஒரு சாதாரண தொல்லையாக தோன்றினாலும், அது தீவிர அசௌகரிய நிலைகளை ஏற்படுத்தக்கூடும். பொதுவான காரணிகளால் ஏற்படும் சாதாரண சளியை வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே எளிதில் குணப்படுத்திவிடலாம். சாதாரண சளியை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று இந்த பதிப்பில் விரிவாக காணலாம்.
சாதாரண சளி தொந்தரவுக்கான வீட்டு வைத்தியங்களை பற்றி அறியத் தொடங்கும் முன், சளியை ஏற்படுத்தும் காரணிகள், சளி ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள், சளி தொந்தரவின் பல்வேறு நிலைகள் போன்றவற்றை பற்றி இந்த பதிப்பில் தெளிவாக படித்து அறியலாம்.
சளித் தொந்தரவுகள் காரணங்கள் – Causes of Common Cold in Tamil
சளி தொந்தரவை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றினால் சாதாரண சளி நோய்க்குறைபாடு ஏற்படுகிறது; பல்வேறு வகையான வைரஸ்கள் சளியை ஏற்படுத்துபவையாக திகழ்கின்றன, அவற்றில் ரினோ வைரஸ் என்பது குறிப்பிடத்தக்க வைரஸ் ஆகும். பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை கொண்ட குழந்தைகள், பெரியவர்கள் போன்றோர் எளிதில் சளி தொந்தரவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது (1, 2).
பெரும்பாலான நேரங்களில், உடலில் ஏற்படும் சளித்தொற்று அதிக காலத்திற்கு நீடிக்காது; சில மக்களுக்கு ஒரு சில நாட்களில் அல்லது ஒரு வாரத்தில் கூட சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆனால், இந்த கால அளவை மீறி சளி பிரச்சனை தொடர்ந்தால் அது அசாதாரண நிலையை குறிக்கும்; அச்சமயத்தில் மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
சளி பிரச்சனையின் அறிகுறிகள் – Symptoms of Common Cold in Tamil
உடலில் சளி பிரச்சனை ஏற்பட்டிருந்தால், அதை சுட்டிக்காட்ட கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படலாம்.
- தும்மல்
- மூக்கடைப்பு
- மூக்கு ஒழுகுதல்
- கீறல் ஏற்பட்ட தொண்டை
- இருமல்
- தலைவலி
- தசை வலிகள்
- நாசியில் நீர் சொட்டுதல்
- பசியின்மை
- புண் கொண்ட தொண்டை
- கண்களில் நீர் வெளிப்படுதல்
ஒரு சில சமயங்களில் காய்ச்சல் ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் கூட போகலாம்; பொதுவாக குழந்தைகளுக்கு 100oF முதல் 102oF வரை காய்ச்சல் ஏற்படலாம் (3, 4).
சளி தொந்தரவுக்கான வீட்டு வைத்தியங்கள்- Home Remedies for Common Cold in Tamil
சளி தொந்தரவை போக்க உதவும் தீர்வுகள் – வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
வைத்தியம் 1: நீர் – உப்பு கொப்புளித்தல்
தேவையான பொருட்கள்:
- ஒரு தம்ளர் வெந்நீர்
- 1 தேக்கரண்டி உப்பு
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
உப்பினை வெந்நீரில் கலந்து கொப்புளிக்க வேண்டும்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
நாள் ஒன்றுக்கு இருமுறை செய்யவும்.
ஏன் இது வேலை செய்யும்?
பொதுவாக சளி பிரச்சனையுடன் ஏற்படும் தொண்டைப்புண்ணை இதமாக்க இந்த வெந்நீர் கொப்புளித்தல் உதவும்; தண்ணீர் தொண்டையை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும் மற்றும் உப்பு ஏற்பட்ட நோய்த்தொற்றை எதிர்த்து போராட உதவும் (5).
வைத்தியம் 2: எப்சம் உப்பு
தேவையான பொருட்கள்:
- வெந்நீர்
- 1 கப் எப்சம் உப்பு
- ஒரு குளியல் தொட்டி
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- குளியல் தொட்டியில், உடல் தாங்கக்கூடிய அளவு சூடு கொண்ட நீரை நிரப்பவும்
- அதில் எப்சம் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 20 நிமிடங்கள் அல்லது அதற்கு அதிகமான நேரத்திற்கு இந்த நீரில் உடலை ஊற வைக்கவும்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
சளி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறும் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த முறையை பின்பற்றவும்.
ஏன் இது வேலை செய்யும்?
சளி பிரச்சனையால் ஏற்பட்ட மூக்கடைப்பை சரி செய்து, உடலின் சோர்வை போக்க இந்த முறை உதவும்; இது ஒரு மிகச்சரியான ஆவி குளியல் ஆகும். எப்சம் உப்பை சேர்ப்பதன் மூலம் உடலை சுத்தப்படுத்தி,வலி உள்ள தசைகளை ஓய்வடைய செய்ய பயன்படும் (6).
வைத்தியம் 3: கருப்பு மிளகு
தேவையான பொருட்கள்:
- ½ தேக்கரண்டி புதிய கருப்பு மிளகு
- 1 கப் மிதமான சுடுநீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- நீரில் மிளகு பொடியை நன்கு கலந்து கொள்ளவும்
- இந்த கலவையை குடிக்கவும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
இந்த முறையை ஒரு சில மணிநேரங்களுக்கு பிறகு மீண்டும் செய்யவும்.
ஏன் இது வேலை செய்யும்?
சளியின் போக்கை கட்டுப்படுத்த கருப்பு மிளகு உதவும் மற்றும் தும்மலை நிறுத்த பயன்படும். தொண்டையில் ஏற்பட்ட வலி, இருமல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற உதவும் (7).
வைத்தியம் 4: இஞ்சி
தேவையான பொருட்கள்:
- 1 அங்குல இஞ்சி துண்டு
- 1 கப் சுடுநீர்
- 1 தேக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- இஞ்சித்துண்டை நசுக்கி, ஒரு சில நிமிடங்களுக்கு சுடுநீரில் ஊற வைக்கவும்.
- இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இவ்வாறு தயாரித்த இஞ்சி தேநீரை குடிக்கவும்.
இஞ்சி பேஸ்ட் அல்லது நசுக்கிய இஞ்சியை சூடான சூப் மற்றும் ஸ்டூ உணவு வகைகளில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் இது சளியை எதிர்த்து போராடவும் பயன்படும்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
ஒரு நாளைக்கு 2-3 கப் எனும் அளவில் இஞ்சி தேநீரை பருகலாம்.
ஏன் இது வேலை செய்யும்?
இஞ்சி என்பது வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் ஆகும்; இது சளி தொந்தரவு, சளியின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளித்து, உடல் சூட்டை சரியான அளவில் வைக்க உதவும் (8). இஞ்சி, மூக்கிற்கு இதமளிக்கும் மணத்தை கொண்டுள்ளது; இதில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்துள்ளன. இஞ்சியில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் காரத்தன்மை மூக்கடைப்பை சரி செய்து, நாசி பாதையை சீராக்க பயன்படும் (9).
வைத்தியம் 5: பூண்டு
தேவையான பொருட்கள்:
- 1-2 பூண்டு பல்
- 1 தேக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
பூண்டுப்பற்களை நசுக்கி, அதில் தேன் சேர்த்து உட்கொள்ளவும்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
ஒரு நாளைக்கு இருமுறை இச்செய்முறையை செய்து வர வேண்டும்.
ஏன் இது வேலை செய்யும்?
பூண்டு என்பது ஒரு பொதுவான சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருள் ஆகும்; இது மனித ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. ஒரு சில ஆய்வறிக்கைகள், சளி பிரச்சனையிலிருந்து விடுதலை பெற பூண்டு உதவும் என்று கருத்து தெரிவித்துள்ளன. பூண்டு ஆன்டி மைக்ரோபையல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகளை கொண்டுள்ளதால், இது வைரஸினால் ஏற்படும் சளி மற்றும் சளியின் அறிகுறிகளை குணப்படுத்த உதவுகிறது (10).
வைத்தியம் 6: தேன்
தேவையான பொருட்கள்:
- 1 தேக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
தேனினை அப்படியே உட்கொள்ளலாம்; இரவு தூங்கச் செல்லுமுன் சூடான பாலில் தேனை கலந்தும் பருகலாம்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
ஒரு நாளைக்கு இருமுறை தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏன் இது வேலை செய்யும்?
தேன் என்பது நல்ல குணப்படுத்தும் மற்றும் ஆன்டி வைரல் பண்புகளை கொண்ட ஒரு பொருள் ஆகும்; இது சளி மற்றும் தொண்டைப்புண்ணை சரி செய்ய மிகவும் பயனுள்ள வகையில் பயன்படும். இதில் அடங்கியுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உதவி, சளியை ஏற்படுத்தும் வைரஸ் அல்லது பாக்டீரியாவை எதிர்த்து போராட பயன்படுகின்றன (11). இது சார்ந்த அதிக பயன்களை பெற பச்சையான, இயற்கையான தேனினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைத்தியம் 7: கிரீன் டீ/ பசுமை தேநீர்
தேவையான பொருட்கள்:
- 1 கிரீன் டீ பை
- தேன்
- ஒரு தம்ளர் வெந்நீர்
- எலுமிச்சை சாறு
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கிரீன் டீ பையை 3-5 நிமிடங்கள் வரை வெந்நீர் நிறைந்த தம்ளரில் போட்டு வைக்கவும்.
- பின்னர் அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து, இந்த அற்புதமான மூலிகை தேநீரை பருகவும்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
ஒரு நாளைக்கு 2-3 கப் கிரீன் டீயை பருகலாம்.
ஏன் இது வேலை செய்யும்?
சைனஸ் சுரப்பை இலகுவாக்க சூடான பானங்களை பருகுவது உதவும்; சளி பிடித்திருக்கும் பொழுது சூடான பானங்களை பருகுவது சளி தொந்தரவை குறிக்கும் அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல், தொண்டைப்புண், சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற உதவும் என்று ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன (12). கிரீன் டீயை பருகுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள் நோய்க் குறைபாட்டிலிருந்து விரைந்து விடுபட உதவும் (13).
வைத்தியம் 8: அத்தியாவசிய எண்ணெய்கள்
தேவையான பொருட்கள்:
- 4-5 துளிகள் பெப்பர்மிண்ட் எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- இந்த 2 எண்ணெய்களையும் ஒன்றாய் சேர்த்து, இக்கலவையை மார்பு, கழுத்து, நெற்றி போன்ற இடங்களில் தடவவும்.
- எவ்வளவு நேரத்திற்கு இதை அப்படியே விட முடியுமோ, அத்தகு நேரத்திற்கு அப்படியே விட்டு வைக்கவும்.
வெந்நீரில் இந்த அத்தியாவசிய எண்ணெய்களை ஒரு சில துளிகள் கலந்து ஆவி குளியல் எடுக்கலாம்; இது இன்னொரு வகையான முறை ஆகும். இதனால் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்; விரவிப் பரப்புவானை பயன்படுத்தி இவ்வத்தியாவசிய எண்ணெய்களின் நறுமணம் அறை முழுவதும் பரவுமாறு செய்யலாம். இது காற்றில் இருக்கும் வைரஸ் அல்லது பாக்டீரியாக்களை கொன்று, மூக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தவும்.
ஏன் இது வேலை செய்யும்?
அத்தியாவசிய எண்ணெய்கள் உடலை மசாஜ் செய்ய உதவி, உடலுக்கு ஓய்வு அளிக்க உதவுவதோடு மட்டுமில்லாமல், சளி பிரச்சனையிலிருந்து விடுதலை பெறவும் பயன்படுகிறது. மூக்கடைப்பில் இருந்து விடுபட யூகலிப்டஸ் எண்ணெயும், சளி நீக்க மருந்தாக பெப்பர்மிண்ட் எண்ணெயும் பயன்படுகின்றன (14, 15). ஆர்கனோ எண்ணெய்கள், வைரஸ்களை கொன்று ஆன்டி வைரல் செயல்பாட்டில் ஈடுபடுகின்றன (16). இந்த எண்ணெய்களின் நறுமண வாசம், உடல் நரம்புகளை இதமாக்கி, ஓய்வான உணர்வை வழங்க உதவுகிறது.
வைத்தியம் 9: காதா ரெசிபி
தேவையான பொருட்கள்:
- 1-1.5 அங்குல இஞ்சித்துண்டு
- 2 கருப்பு மிளகு
- 5-6 புனித துளசி இலைகள்
- 4 கிராம்புகள்
- இரண்டு தம்ளர் வெந்நீர்
- 1 தேக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- இஞ்சி, மிளகு, துளசி இலைகள், கிராம்பு ஆகியவற்றை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொண்டு, அது பாதியளவு ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
- இந்நீரை வடிகட்டி, அந்நீரில் தேன் சேர்த்து குடிக்கவும்.
வடிகட்டிய மூலிகைகள் மற்றும் காரங்களை மீண்டும் காதா ரெசிபி தயாரிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
ஒரு நாளைக்கு 2-3 கப் இந்த கலவையை பருக வேண்டும்.
ஏன் இது வேலை செய்யும்?
பொதுவாக காதா என்பது மூலிகை தேநீர்; பெரும்பாலான இந்திய வீடுகளில் சளி, இருமல், சுவாசக்குழாய் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய இத்தேநீரை தான் பயன்படுத்துவர். இந்த மூலிகைகள் சைனஸ் பிரச்சனையை சரி செய்ய மற்றும் சளியை ஏற்படுத்திய வைரஸினால் உடலில் ஏற்பட்ட விளைவுகளை களையவும் பயன்படுகிறது (17, 18, 19).
வைத்தியம் 10: வெங்காயம்
தேவையான பொருட்கள்:
- 1 சிவப்பு வெங்காயம்
- தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- வெங்காயத்தை உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- இவ்வெங்காய துண்டுகளை மறைக்கும் அளவு, அவற்றின் மீது தேனை ஊற்றவும்.
- ஒரு குளிர்ந்த இடத்தில் காற்றுப்புகாத டப்பாவில் இவற்றை வைத்து இரவு முழுவதும் இதை அப்படியே விட்டுவிடவும்.
- 1-2 தேனில் ஊற வைத்த வெங்காய துண்டுகளை காலையில் உட்கொள்ளவும்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
1-2 வெங்காய துண்டுகளை ஒரு நாளைக்கு இருமுறை உட்கொள்ளவும்; வெங்காய துண்டுகளை உண்டு முடித்த பின், மீதமுள்ள தேனை கூட உண்ணலாம்.
ஏன் இது வேலை செய்யும்?
வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபையல் பண்புகள், சளி நீக்க மருத்துவ பண்புகள் போன்றவை நிறைந்துள்ளன; இது மார்பு மற்றும் மூக்கில் அடைத்துக் கொண்டிருக்கும் சளியை இலகுவாக்கி, உடலில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது. வைரஸ் நோய்த்தொற்றினால் ஏற்பட்ட வீக்கத்தை போக்கி, சுவாச பாதைகளை பழைய நிலைக்கு கொண்டு வர வெங்காயம் பயன்படுகிறது (20, 21).
வைத்தியம் 11: சூப்
தேநீரை தவிர, சூடான சூப், ப்ரோத், ஸ்டூ போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் சளி தொந்தரவின் அறிகுறிகளில் இருந்து விடுபட இயலும். வீட்டில் செய்த காய்கறி சூப், சிக்கன் சூப் போன்றவற்றை உட்கொள்ளலாம்; இவை சளியிலிருந்து விடுதலை பெற உதவுகிறது, அதனால் தான் அன்னைமார்கள் சளியை போக்க சிக்கன் சூப் போன்ற சூப் வகைகளை பருக அளிப்பார்கள். ஆய்வறிக்கைகள் வெள்ளை இரத்தணுக்களை கட்டுப்படுத்தி, சளியின் அறிகுறிகளை அதிகரித்து விட வாய்ப்புள்ளது என்று கருத்து தெரிவிக்கின்றன (22). மேலும் சூப்பில் உள்ள பண்புகள் சளியை மெல்லியதாக்கி, மூக்கு வழியாக சளியை வெளியேற்ற உதவுகின்றன; இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆற்றல் அளவுகளை அதிகரிக்க பயன்படுகின்றன.
வைத்தியம் 12: பட்டை
தேவையான பொருட்கள்:
- ½ தேக்கரண்டி பட்டை பொடி
- 1 மேஜைக்கரண்டி இயற்கை தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- தேன் மற்றும் பட்டை பொடியை நன்கு கலக்கி கொள்ளவும்.
- இதை உட்கொள்ள வேண்டும்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
ஒரு நாளைக்கு 2 முறை இம்முறையை பின்பற்றவும்.
ஏன் இது வேலை செய்யும்?
பட்டை பொடியில் உள்ள ஆன்டி வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்றை குணப்படுத்தி, சளியின் அறிகுறிகளில் இருந்து நிவாரணமளிக்க பயன்படுகின்றன (23).
வைத்தியம் 13: மீன் எண்ணெய்
மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்டுகள், பல்வேறு அழற்சி பிரச்சனைகளை குணப்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்; இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்டுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அழற்சி பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுகின்றன (24). சளியை குணப்படுத்த மற்றும் சுவாச பாதைகளை சுத்தப்படுத்தி, நாசி பாதையில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தை போக்க மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்டுகள் பயன்படுகின்றன; இது காற்று மற்றும் இதர காரணிகளால் சுவாச உறுப்புகளில் உண்டான சளி போன்ற நோய்த்தொற்றுகளை குணப்படுத்தி சுவாச பாதைகளை மேம்படுத்த பயன்படுகிறது.
வைத்தியம் 14: மஞ்சள் பால்
தேவையான பொருட்கள்:
- 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி
- ஒரு தம்ளர் சூடான பால் (பாதாம், அரிசி, முந்திரி அல்லது தேங்காய் பால்)
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- பாலில் மஞ்சள் பொடியை நன்கு கலந்து கொள்ளவும்.
- இப்பானத்தை இரவு தூங்கும் முன் குடிக்கவும்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
சளி பிரச்சனையில் இருந்து விடுதலை பெறும் வரை, இச்செய்முறையை ஒவ்வொரு நாள் இரவும் உபயோகிக்கவும்.
ஏன் இது வேலை செய்யும்?
மஞ்சளில் குர்குமின் எனும் ஆன்டி பையாட்டிக் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் அடங்கியுள்ளன; இந்த நன்மை தரும் மூலிகையை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம் (25).
வைத்தியம் 15: ஆப்பிள் சிடர் வினிகர்
தேவையான பொருட்கள்:
- 1 மேஜைக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகர்
- ஒரு தம்ளர் வெந்நீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
இந்த வினிகரை சூடான நீரில் கலந்து குடிக்கவும்; இதில் இயற்கை தேனை கலந்து கூட குடிக்கலாம்..
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
நாள் ஒன்றுக்கு 2-3 கப் என்ற அளவில் இதை பருக வேண்டும்.
ஏன் இது வேலை செய்யும்?
ஆப்பிள் சிடர் வினிகர் உடலில் உள்ள pH அளவுகளை சமநிலைப்படுத்தி, உடலில் வைரஸ்கள் வாழ முடியாத நிலையை உருவாக்க உதவுகிறது (26).
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- சாதாரண சளி மற்றும் மார்புச்சளி – வேறுபடுத்துக.
எல்லா சளி பிரச்சனைகளும் சளி தொற்றினால் ஏற்படும் பொழுது, சாதாரண சளி மற்றும் மார்புச்சளியை வேறுபடுத்திக் காட்டுவது அவற்றை சுட்டிக்காட்டும் அறிகுறிகள் தான். சாதாரண சளி தொந்தரவினை தலை சளி என்றும் கூறுவார்கள்; இதனால் தலைவலி அல்லது தலையில் பாரமான உணர்வு, மூக்கு ஒழுகுதல், கண்களில் இருந்து கண்ணீர் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இருமலுடன் கூடிய நுரையீரல் அடைப்பு ஏற்பட்டால் அது மார்புச்சளியை குறிக்கும்; இதனை நெஞ்சுச்சளி என்றும் அழைப்பர்.
- சாதாரண சளிக்கென தடுப்பூசி எதுவும் உள்ளதா?
இல்லை, சாதாரண சளிக்கென தடுப்பூசி எதுவும் இல்லை. சளி எனும் பிரச்சனை 200 வகையான வைரஸ்களால் ஏற்படலாம்; இந்த எல்லா வைரஸ்களையும் அழித்து தடுக்கும் தடுப்பூசி இன்னும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
- சளி தொந்தரவு என்பது எதனால் ஏற்படக்கூடியது, வைரஸ் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று?
சளி பிரச்சனை வைரஸால் ஏற்படக்கூடியது, ஆகவே இது ஒரு வைரஸ் நோய்த்தொற்று ஆகும்.
- சாதாரண சளியை ஆன்டி பையாட்டிக்குகளால் குணப்படுத்த முடியாதது ஏன்?
ஆன்டி பையாட்டிக் என்பது பாக்டீரிய நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடக்கூடியவை; சளி என்பது ஒரு வைரஸ் நோய்த்தொற்றாக இருப்பதால், ஆன்டி பையாட்டிக்குகளை எடுத்துக் கொள்வதால் எந்த பயனும் இல்லை. இவற்றால் வைரஸ்களை அழிக்க முடியாது.
- சளி ஏற்படும் பொழுது தும்மல் வருவதேன்?
வைரஸ் தொற்றினால் நாசி செல்களில் ஏற்படும் தாக்குதலை எதிர்த்து போராட, உடல் இயற்கையாகவே உண்டாக்கும் ஒரு அழற்சி எதிர்ப்பு பொருள் தான் ஹிஸ்டமைன். இது இரத்த குழாய்களை கசிய செய்யும் மற்றும் சளியை சுரக்கும் சுரப்பிகள் அதிகளவு சளியை சுரக்கச் செய்யும். இது மூக்கில் எரிச்சலை ஏற்படுத்துவதால், நமக்கு தும்மல் வருகிறது.
- சாதாரண சளி, காய்ச்சலை ஏற்படுத்துமா?
சளியின் இதர அறிகுறிகளுடன் காய்ச்சல் எனும் நோய்க்குறைபாடு ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் போகலாம். அப்படியே ஏற்பட்டாலும் அது ஒரு லேசான காய்ச்சலாக தான் இருக்கும்.
- ஒருவருக்கு சளி பிடித்திருந்தால் நோய்தொற்று எவ்வளவு காலம் வரை பரவ வாய்ப்புண்டு?
சளியின் அறிகுறிகளை அனுபவிக்கும் முன்பான தினத்திலிருந்து அடுத்த ஏழு நாட்கள் வரை, உங்கள் உடலில் இருந்து மற்றவருக்கு சளியை ஏற்படுத்தும் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்புண்டு. குழந்தைகளில் இந்த கால அளவு இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம்.
- மூக்கு ஒழுகுதல் நிற்க எவ்வளவு காலம் ஆகும்?
பொதுவாக, 5-7 நாட்களில் மூக்கு ஒழுகுதல் பிரச்சனை நிற்கும்.
பதிப்பில் கூறப்பட்டுள்ள இயற்கையான வீட்டு வைத்தியங்களை பின்பற்றி, சளியை குணப்படுத்த முயலும் முன் ஒரு சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்; ஒரு சில உணவு மற்றும் மூலிகைகள் எல்லா மக்களுக்கும் பொருந்தாது. உதாரணத்திற்கு, தேனினை ஒரு வயதுக்கு கீழான குழந்தைளுக்கு கொடுக்கக்கூடாது; அதே போல், அத்தியாவசிய எண்ணெய்களால் சில மக்களுக்கு ஒவ்வாமை குறைபாடு ஏற்படலாம். கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் இது போன்ற விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
நாள்பட்ட தொந்தரவை அளிக்கும் சளியை குணமாக்குவது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறிந்தீர்கள். சளியை குணமாக்க உதவும் இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து சளி பிரச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள். சில நேரங்களில் ஒரு சில வீட்டு ஒன்றாக முயற்சித்தால், சளி பிரச்சனையிலிருந்து மிக விரைவில் விடுதலை பெறலாம். இவ்வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றும் பொழுது பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொள்ள வேண்டும். அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த பதிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறோம்; பதிப்பு குறித்த உங்களது கருத்துக்களை கீழேவுள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக பகிருங்கள்!
The post சாதாரண சளி தொந்தரவுக்கான வீட்டு வைத்தியங்கள் – Home Remedies for Common Cold in Tamil appeared first on STYLECRAZE.